"தம்பி ஆம்புலன்ஸ் வெயிட்டிங்"... "சீக்கிரம் கொஞ்சம் 'பக்கோடா'வ போடுப்பா"... 'கொரோனா' உறுதியான நிலையில் ஷாக் கொடுத்த 'பெரியவர்'...!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், தென்காசி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

"தம்பி ஆம்புலன்ஸ் வெயிட்டிங்"... "சீக்கிரம் கொஞ்சம் 'பக்கோடா'வ போடுப்பா"... 'கொரோனா' உறுதியான நிலையில் ஷாக் கொடுத்த 'பெரியவர்'...!!

இதுவரை, தென்காசி மாவட்டத்தில் 824 பேர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 102 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி அருகே அமைந்துள்ள பழைய மார்க்கெட் பகுதியான சிதம்பர விநாயகர் கோவில் தெருவில் 26 பேர் கொரோனா மூலமாக பாதிக்கப்பட்டதால் அந்த தெரு முழுவதும் அடைக்கப்பட்டு தடுப்பு போடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் ஒரு முதியவர் மற்றும் 2 பெண்கள் உட்பட மூன்று பேருக்கு புதிதாக  கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர்களை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வந்து காத்திருந்தது. காவலர் ஒருவருடன் அவர்கள் மூன்று பேரும் ஆம்புலன்சில் ஏறச் சென்ற நிலையில், அதில் கொரோனா பாதிக்கப்ட்ட அந்த முதியவர், அங்கிருந்த கடை ஒன்றில் பகோடா வாங்க சென்றுள்ளார். அப்போது, உடனிருந்த அதிகாரிகள் அதனை கண்டிக்கவில்லை என தெரிகிறது.

அப்போது, அருகில் வேறு சிலரும் சாதாரணமாக நின்று கொண்டிருந்தனர். கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் சர்வ சாதாரணமாக கடையில் பகோடா வாங்க சென்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்த முதியவர் கையுறை அணிந்திருந்ததும், அங்கிருந்தவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்