Naane Varuven M Logo Top

"பெத்தவங்கள பாத்துக்க முடியலைன்னா.. அவங்க கொடுத்த சொத்தும் செல்லாது".. நிராதரவான முதியவர்.. மாவட்ட ஆட்சியர் போட்ட நெகிழ்ச்சி உத்தரவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தென்காசியில் பெற்றோரை கவனிக்க தவறிய மகன்கள் தங்களது தந்தையிடம் இருந்து பெற்ற சொத்துக்களை திருப்பியளிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். இது பலரையும் நெகிழ செய்திருக்கிறது.

"பெத்தவங்கள பாத்துக்க முடியலைன்னா.. அவங்க கொடுத்த சொத்தும் செல்லாது".. நிராதரவான முதியவர்.. மாவட்ட ஆட்சியர் போட்ட நெகிழ்ச்சி உத்தரவு..!

Also Read | "என்னமோ தப்பா நடக்குது".. கரை ஒதுங்கிய 200க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள்.. நிபுணர்கள் சொல்லிய அதிர்ச்சி தகவல்..!

சொத்து

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சீதாராம் (85) மற்றும் சண்முக வடிவு (78). இந்த தம்பதிக்கு மொத்தம் 4 மகன்கள். ஒருமகன் இறந்துவிட்ட நிலையில், சிறுவயதில் காணாமல்போன இன்னொரு மகன் என்ன ஆனார் என்பது இதுவரையில் தெரியவில்லை. இறந்துபோன மகனுக்கு 7 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 2002 ஆம் ஆண்டு சீதாராம் தம்பதி தனது எஞ்சிய மகன்கள் கடல்மணிராஜா மற்றும் செல்லப்பாண்டி ஆகியோருக்கு தங்களது சொத்துக்களை எழுதிக்கொடுத்திருக்கின்றனர்.

வாக்குவாதம்

இந்நிலையில், இறந்து போன தங்களுடைய மகனது 7 குழந்தைகளுடன் வயதான தம்பதி வசித்து வருகின்றனர். விவசாயம் மூலமாக கிடைக்கும் வருமானத்தின் துணையோடு அந்த குழந்தைகளை வளர்த்து வந்திருக்கிறார் சீதாராம். இதனால் கடல்மணிராஜாவுக்கும் சீதாராமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுவந்ததாக தெரிகிறது. இதனால் தனது பெற்றோரை சென்று சந்திப்பைதையே கடல்மணிராஜா நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இவர்களது இன்னொரு மகன் செல்லப்பாண்டியம் பாளையம்கோட்டையில் வசித்துவருவதால் முதிய தம்பதி பொருளாதார ரீதியாக தவித்துவந்திக்கின்றனர்.

Tenkasi collector order to return property to old man from his son

உதவி

இருமகன்களிடமும் உதவி கேட்டும் இருவரும் மறுத்துவிட்டதால், தனது சொத்துக்களை மீட்டுத் தருமாறு தென்காசி கோட்டாட்சியருக்கு புகார் மனு அனுப்பி இருக்கிறார் சீதாராம். மனுவை விசாரித்த கோட்டாட்சியர் கங்காதேவியிடம் இரு மகன்களும் பெற்றோரை பராமரிக்க இயலாது என கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து இருவருக்கும் முதியவர் எழுதிக் கொடுத்த ஆவணங்கள் செல்லாது என கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இதனை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் கடல்மணிராஜா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்து உத்தரவிட்டார். இதன்மூலம் வயதான தம்பதிக்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து திரும்ப கிடைத்திருக்கிறது. இந்த சொத்தைக்கொண்டு தங்களது பேரக்குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் சீதாராம்.

Also Read | "எலான் குடும்பத்துக்கு சொந்தமா எமரால்ட் சுரங்கம் இருக்கு".. கொளுத்திப்போட்ட நபர்.. மஸ்க் போட்ட பொளேர் ட்வீட்..!

TENKASI, TENKASI COLLECTOR, RETURN PROPERTY, OLD MAN, SON

மற்ற செய்திகள்