வறுமையில் தவித்த பள்ளி மாணவி.. ஆசிரியர்கள் செஞ்ச செயல்.. அந்த மனசுதான் சார் கடவுள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கீரனூர் அருகே வறுமையிலும் கஷ்டப்பட்டு படித்துவந்த பள்ளி மாணவிக்கு ஆசிரியர்கள் இணைந்து உதவி செய்திருப்பது பொதுமக்களை நெகிழ வைத்திருக்கிறது.

வறுமையில் தவித்த பள்ளி மாணவி.. ஆசிரியர்கள் செஞ்ச செயல்.. அந்த மனசுதான் சார் கடவுள்..!

"நான்தான் சொன்னேன்.. என்கிட்டே உங்க கோபத்தை காட்டுங்க".. பிரதமர் மோடி ஓபன் டாக்.. என்ன நடந்துச்சு..?

கீரனூர்

கீரனூர் அருகே உள்ளது லெக்கனாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி. இங்கே 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். பாடம் நடத்துவது மட்டும் இன்றி மாணவர்களின் துயரை துடைக்கும் முயற்சியிலும் இங்கு உள்ள தலைமை ஆசிரியர் ஆண்டனி மற்றும் சக ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி, இந்தப் பள்ளியில் படிக்கும் சசிகலா என்னும் மாணவிக்கு இந்தப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து உதவி செய்திருக்கின்றனர். இது அந்தப் பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்து உள்ளது.

வறுமை

லெக்கனாபட்டி அரசு உயர்நிலை பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்துவருகிறார் சசிகலா என்னும் மாணவி. 10 ஆண்டுகளுக்கு முன்பே இவரது தந்தை காலமாகிவிட்டார். இந்நிலையில், கூலி வேலைக்கு சென்று தனது மகள் சசிகலா மற்றும் மகனை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார் சசிகலாவின் தாய் மாரியாயி.

Teachers helping a schoolgirl who has grown up in poverty

உதவி

கணவர் மரணித்துவிட்ட நிலையில் தனது பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்துக்கொண்டிருக்கும் மாரியாயின் நிலைமையை அறிந்த லெக்கனாபட்டி அரசு உயர்நிலை  பள்ளி ஆசிரியர்கள் அவருக்கு உதவ நினைத்துள்ளனர். இதனை அடுத்து 5 ஆட்டுக் குட்டிகளை வாங்கி மாரியாயிடம் கொடுத்திருக்கிறார்கள் இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள்.

இதற்காக பள்ளியில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக நிதி திரட்டப்பட்டிருக்கிறது. பள்ளி ஆசிரியர்களும் இந்த நல்ல காரியத்திற்காக பணம் கொடுத்து உதவியிருக்கின்றனர்.

Teachers helping a schoolgirl who has grown up in poverty

தன்னம்பிக்கை

மாரியாயிடம் இந்த ஆட்டுக் குட்டிகளை புதுகை மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் சாமி சத்தியமூர்த்தி முன்னிலையில் வழங்கி இருக்கிறார்கள் பள்ளி ஆசிரியர்கள். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, ஆட்டுக்குட்டிகளை வளர்த்து அதன் மூலம் வறுமையை போக்கிடவும் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்கவும் மாரியாயிக்கு தன்னம்பிக்கை கூறினார்.

Teachers helping a schoolgirl who has grown up in poverty

வறுமையில் வாடிய பள்ளி மாணவிக்கு ஆசிரியர்கள் இணைந்து ஆட்டுக் குட்டிகளை வழங்கி ஆதரவு கரம் நீட்டிய இந்த செயல் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

"ரஷ்யாவுக்கு எதிரா..நாங்க ஜெயிச்சுட்டோம்".. உக்ரைன் அதிபர் மகிழ்ச்சி.. ஓஹோ இதுதான் காரணமா?

KEERANUR, TEACHERS, SCHOOLGIRL, POVERTY, பள்ளி மாணவி, ஆசிரியர்கள், கீரனூர்

மற்ற செய்திகள்