அரையாண்டு தேர்வு விடுமுறை உண்டா... இல்லையா? ஆசிரியர்கள் சங்க கடிதத்தால் பரபரப்பு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரையாண்டு விடுமுறை கண்டிப்பாக வேண்டும் என பள்ளி கல்வித் துறைக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கைக் கடிதம் எழுதி உள்ளனர்.

அரையாண்டு தேர்வு விடுமுறை உண்டா... இல்லையா? ஆசிரியர்கள் சங்க கடிதத்தால் பரபரப்பு

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆக பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளில் பங்கேற்று பாடங்களைக் கற்று வந்தனர். இந்த சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு பதற்றம் சற்றே குறைந்த போது கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் தொடங்கின.

teachers association requesting half yearly holidays to DPI

முதலில் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்த கற்கத் தொடங்கினர். பின்னர் கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் தொடக்கப்பள்ளிகளும் செயல்படத் தொடங்கின. இடையில் வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை விடும் சூழல் ஏற்பட்டது. ஆனாலும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

teachers association requesting half yearly holidays to DPI

இதனால் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைந்து பாடத்திட்டங்களை நிறைவு செய்ய ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் டிசம்பர் இறுதியில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக டிசம்பர் இறுதியில் அரையாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு அதிகப்படியான விடுமுறைகளால் அரையாண்டு விடுமுறை இருக்காது என்ற செய்தி பரவியது.

teachers association requesting half yearly holidays to DPI

இதனால் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பண்டிகை காலங்களில் ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பொருட்டு விடுமுறை வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அரையாண்டு விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கை கடித்தத்தை ஆசிரியர்கள் சங்கம் பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCHOOLSTUDENT, SCHOOL HOLIDAYS, HALFYEARLY HOLIDAYS, DPI, அரையாண்டு தேர்வு விடுமுறை, அசிரியர்கள் சங்கம்

மற்ற செய்திகள்