நம்ம குழந்தைகளுக்கும் அங்க மாதிரி 'ஆல் பாஸ்' கொண்டு வரணும்...! 'ஆசிரியர் அமைப்புகள் கோரிக்கை...' பள்ளிக்கல்வி துறை தீவிர ஆலோசனை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெற செய்து அனுப்புமாறு உத்திரபிரதேச கல்வி துறை உத்தரவு பிறப்பித்தது.

நம்ம குழந்தைகளுக்கும் அங்க மாதிரி 'ஆல் பாஸ்' கொண்டு வரணும்...! 'ஆசிரியர் அமைப்புகள் கோரிக்கை...' பள்ளிக்கல்வி துறை தீவிர ஆலோசனை...!

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை கதிகலங்க செய்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் நோய் பாதிக்கப்பட்ட ஒரு சிலரால் தற்போது இந்தியாவிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இதுவரை இந்தியாவில் 179 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3 பேர் உயிரிழந்ததாகவும் அதிகார பூர்வ அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநில மக்களை கொரோனா வைரஸ் பாதிக்காமலும், பரவாமலும் இருக்க பல்வேறு நோய் தற்காப்பு விழிப்புணர்வுகளையும், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தின் கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் எல்லா மாணவர்களும் எவ்வித தேர்வும் எழுதப்படாமல், அனைவரும் அடுத்த வகுப்புக்கு செல்லும் வகையில்  ‘ஆல் பாஸ்’ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்ச்சி அறிவிக்கும் முறை மாணவர்களின் மதிப்பீட்டை பொறுத்தவரை வகுப்புக்கு வருகை மற்றும் செயல்திறன் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை அடுத்து உத்தரப்பிரதேசத்தை போல் தமிழகத்திலும் 9ஆம் வகுப்பு  வரை அனைவரையும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை சம்பந்தமாக தமிழக தேர்வுத்துறை தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பள்ளி தேர்வு  ஒத்திவைப்பு, தேர்வு ரத்து குறித்து விரைவில் தேர்வுத்துறை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCHOOL