திடீரென கேட்ட 'வெடிச்சத்தம்'... 'இடிந்து' போய் கிடந்த வீட்டுக்குள்... மொத்த குடும்பமும் 'சடலமாக' கிடந்த அவலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகன் இறந்த துக்கத்தில் ஆசிரியை தன்னுடைய 2 மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகேயுள்ள பாரத்நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகவுரி(58). இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கிறார். கடந்த 10 மாதங்களுக்கு ஏற்பட்ட சாலை விபத்தால் 8 மாதங்களாக அவருடைய மகன் கோமாவில் இருந்துள்ளார். சில தினங்களுக்கு அவரை விஜயகவுரி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை அவருடைய மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்ய அவர்கள் வந்து பார்த்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்து சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் ஊழியர்களை விசாரித்தபோது அவர்கள் அவரது மகன் இறந்த தகவலை சொல்லி சென்றனர். விஜயகவுரி குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினருடன் பேச மாட்டார்கள் என்பதால் அவரது வீட்டுக்கு யாரும் துக்கம் விசாரிக்க செல்லவில்லை.
தொடர்ந்து நேற்று மாலை 7 மணியளவில் விஜயகவுரி வீட்டுக்குள் இருந்து டமார் என்ற சத்தம் மிகப்பயங்கரமாக கேட்டது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அவருடைய வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு இடிந்து கிடந்தது. வீட்டுக்குள் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி உடல் கருகி கிடந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீஸ் விசாரணையில் மகன் இறந்த துக்கம் தாளாமல் கேஸ் சிலிண்டரை வெடிக்கவிட்டு அவர்கள் இறந்து போனது தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மகன் இறந்த துக்கம் தாளாமல் ஆசிரியை தன்னுடைய 2 மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்




