‘ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்து’!.. ஒரே டேபிளில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம்.. கவனம் பெறும் போட்டோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டார்.

‘ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்து’!.. ஒரே டேபிளில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம்.. கவனம் பெறும் போட்டோ..!

கிண்டியில் உள்ள ஆளூநர் மாளிகையில் இன்று (07.05.2021) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும் விழா நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் மதிமுக தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tea party given by Governor to TN CM MK Stalin and Ministers

விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது உறுதிமொழி ஏற்ற ஸ்டாலின், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான், சட்டப்படி அமைக்கப்பற்ற இந்திய அரசியலமைப்பின்பால் உண்மையான நம்பிக்கை கொண்டிருப்பேன். இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும் ஒருமையையும் நிலை நிறுத்துவேன் என்றும், தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக உண்மையாக எனது கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் விருப்பு வெறுப்பை விலக்கிப் பல தரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதைச் செய்வேன் என உளமார உறுதிமொழிகிறேன்’ என்று உறுதிமொழியை வாசித்தார். அப்போது மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். இதனைத் தொடர்ந்து 34 அமைச்சர்கள் வரிசையாக பதவியேற்றனர்.

Tea party given by Governor to TN CM MK Stalin and Ministers

இதனை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து கொடுத்தார். இதில் தமிழக முன்னாள் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tea party given by Governor to TN CM MK Stalin and Ministers

முன்னதாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்த பதிவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ளார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், ஓ.பன்னீர்செல்வம் தேநீர் அருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்