அண்ணே ஒரு 'மஞ்சப்பை' பரோட்டா கொடுங்க.. தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து.. பட்டைய கெளப்பும் மதுரை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை: தமிழகம் முழுவதும் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் மதுரையில் மஞ்சள் பை பரோட்டா விவகாரம் வைரலாகி வருகிறது.

அண்ணே ஒரு 'மஞ்சப்பை' பரோட்டா கொடுங்க.. தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து.. பட்டைய கெளப்பும் மதுரை!

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டிற்கு தடை விதித்த தமிழக அரசு:

உலக நாடுகள் முழுவதும் சுற்று சூழலை பாதுகாக்கும் பொருட்டு முடிந்த அளவு பிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைக்க மக்களிடம் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டிற்கு தடை விதித்தது.

மஞ்சப்பை இயக்கம்:

tasty manjapai barota well received in Madurai

இந்த நடைமுறை மக்களிடம் சில மாதங்கள் கடைபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பைகளின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு சமீபத்தில் பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக மஞ்சப்பை இயக்கம் ஒன்றை தொடங்கியது. இதன்படி பொதுமக்கள் வெளியே செல்லும்போது பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக மஞ்சப்பை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.

இது யாருமே எதிர்பார்க்காத ‘ஷாக்’.. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ‘ஏலம்’ போன வீரர் திடீர் ஓய்வு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

மஞ்சப்பை பரோட்டா:

tasty manjapai barota well received in Madurai

இதன் ஒரு முயற்சியாக மதுரை மாவட்டத்தில் மஞ்சப்பை கலாச்சாரம் மீண்டும் துளிர் விட தொடங்கி உள்ளது. அதோடு மதுரையில் இருக்கும் ஒரு ஓட்டலில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோதுமை மாவில் மஞ்சப்பை வடிவத்தில் பரோட்டா தயாரிக்கப்படுகிறது.

மீண்டும் மஞ்சள் பை:

tasty manjapai barota well received in Madurai

இந்த தனியார் ஓட்டல் மதுரையின் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் இயங்கி வருகிறது. செவ்வக வடிவில் காட்சியளிக்கும் இந்த கோதுமை மஞ்சப்பை பரோட்டா தலா 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த பரோட்டா மீது சாஸ் மூலம் 'மீண்டும் மஞ்சள் பை' என்ற வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளது. தற்போது இந்த பரோட்டாவுக்கு அப்பகுதி மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு உள்ளது.

tasty manjapai barota well received in Madurai

மேலும், ஆரப்பாளையம் ஓட்டலில் பார்சல் வாங்க வருபவர்களுக்கு பரோட்டாவுடன் இலவசமாக மஞ்சப்பை வழங்கப்படுகிறது. இது தவிர வாடிக்கையாளர் முகக்கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மதுரையை ஒரு கலக்கு கலக்கி வருகிறது என்றே சொல்லலாம்.

ஒரு கிராமத்தில் 1500 திருடர்கள்! கொள்ளை அடிப்பது எப்படின்னு ஸ்பெஷல் கிளாஸ் வேற நடக்குது.. அதிர்ச்சி தகவல்

MANJAPAI, BAROTA, MADURAI, மதுரை, மஞ்சப்பை, மஞ்சப்பை பரோட்டா

மற்ற செய்திகள்