'தடைகளைக் கடந்து'.. எளிமையாக நடந்த நந்தினி திருமணம்.. திருமணத்தில் எடுத்த உறுதிமொழி.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசு மதுபானக் கடைக்கு எதிராக, நீதிமன்றத்தில் பேசியதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி சட்டக் கல்லூரி மாணவி நந்தினியும், அவருக்கு துணையாக இருந்த அவரது அப்பாவும் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

'தடைகளைக் கடந்து'.. எளிமையாக நடந்த நந்தினி திருமணம்.. திருமணத்தில் எடுத்த உறுதிமொழி.. வீடியோ!

கடந்த ஜுலை மாதம் 5-ஆம் தேதி திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு நிகழ்ந்ததால், நந்தினியை அடுத்து அவது தங்கை நிரஞ்சனாவும், டாஸ்மாக் என்ற பெயரில் போதைப்பொருள் விநியோகம் செய்வதற்கு எதிரான சட்ட வரைவு எண்ணை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி கைதானார். 

இந்த நிலையில்15 நாள்கள் முடிந்து, 09.07.19 அன்று இரவு சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், நந்தினிக்கும், குணா ஜோதிபாசுவுக்கும் மதுரை மாவட்டம் தென்னமநல்லூர் கிராமத்தில் உள்ள நந்தினியின் குலதெய்வம் கோவிலில் எளிமையாக திருமணம் நடந்துள்ளது. 

மணமக்களுக்கான உடையில் மாலை மாற்றியும், தமிழ் முறைப்படி, மணமக்கள் இருவரும், வாழ்வியல் நெறிகளுடன் வாழவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டும் இல்லறத்தில் இணைந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

NANDHINI, MARRIAGE, TASMAC