காரில் நடுரோட்டில் வீசியெறிந்த படுபாதகர்கள்!.. 20 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!.. தஞ்சையை உலுக்கிய கோரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டில் வேலை பார்த்து வந்த வட மாநில இளம் பெண் ஒருவரை மர்ம நபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதுடன் காரில் கொண்டு வந்து தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டியில் வீசி விட்டுச் சென்றதாக மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அந்தப் பெண்ணை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வி பேசுகையில், "இன்று காலை 10 மணியளவில் தஞ்சை திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டி பகுதிக்கு வேகமாக காரில் வந்த மர்ம நபர்கள் இளம் பெண் ஒருவரைக் கீழே தள்ளிவிட்டு, அதே வேகத்தில் சென்று விட்டனர். மயங்கிய நிலையில் வலியால் துடித்துக் கொண்டிருந்த இருபது வயது மதிக்கத்தக்க அந்த இளம் பெண்ணை மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீட்டு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதன் பின்னர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தோம். அந்தப் பெண்ணுக்குத் தமிழ் பேச தெரியவில்லை. இந்தி மொழிதான் பேசுகிறார். இந்தி பேசத் தெரிந்தவர்களை வைத்து அவரிடம் பேசியபோது, "கடந்த 5 மாதமாக ஒரு வீட்டில் வேலை செய்தேன். அங்கிருந்தவர்கள் என்னை அடித்துத் துன்புறுத்திப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இன்று காலை நான்கு பேர் என்னை காரில் அழைத்து வந்ததுடன், இந்த இடத்தில் தள்ளி விட்டுச்சென்று விட்டனர்" என வயிற்றைப் பிடித்துக்கொண்டு திணறியபடி கூறினார்.
அந்தப் பெண் உடல் முழுக்கக் காயங்கள் இருந்தன. முகம், கண் உள்ளிட்ட பகுதிகள் வீங்கியிருந்தன. அந்த வீட்டில் இருந்த அத்தனை பேரும் அடித்துத் துன்புறுத்திக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள் என்பதை இளம் பெண்ணின் உடல் நிலையைப் பார்த்து அறிய முடிகிறது. இதுதொடர்பாக செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம்.
போலீஸார் தீவிரமாக விசாரித்து இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மாதர் சங்கத்தினர் சும்மா விடப்போவதில்லை. மொழி தெரியாத பெண்ணாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்து மிக மோசமாக நடந்துகொண்டுள்ளனர்.
அந்தப் பெண் வைத்திருந்த பையில் ரூ.48,000 பணம் இருந்தது. அதனால், இதனை நிச்சயம் பணம் படைத்தவர்கள்தான் செய்திருக்க வேண்டும். பகல் நேரத்தில் காரில் வந்து விட்டுச் சென்றதால், இதைச் செய்தவர்களைக் காவல்துறையினர் ஈசியாக கண்டுபிடித்துவிடலாம். பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிற அந்தப் பெண்ணுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.
மற்ற செய்திகள்