2 நாளைக்கு தட்டி வீசப்போகுது மழை.. இந்த இடங்கள்லாம் மிக கனமழை இருக்கும்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருக்கிறார்.

2 நாளைக்கு தட்டி வீசப்போகுது மழை.. இந்த இடங்கள்லாம் மிக கனமழை இருக்கும்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்..

Also Read | "இத திருடிட்டு போய் நான் பட்ட பாடு இருக்கே".. கோவில் நகைகளை திருடிய திருடனின் உருக்கமான கடிதம்!

வட கிழக்கு பருவ மழை

இந்திய அளவில் தென்மேற்கு பருவ மழையின்போது பெரும்பாலான மாநிலங்கள் மழையை பெறும் என்றாலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது மட்டுமே கணிசமான மழைப் பொழிவு இருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையானது கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கியது. இது நவம்பர் 3 ஆம் தேதியுடன் முடிவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Weatherman post for today and tomorrow, rain conditions

இதனிடையே இன்றும் நாளையும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னை

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.சென்னை எல்லையில் மேக மூட்டங்கள் அதிகமாக காணப்படுவதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு தமிழ்நாடு கடற்கரையில் பெரிய மேகங்கள் நிலைக்கொண்டுள்ளன. அவை மெதுவாக நகரும் பட்சத்தில், மழையின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகியவை கடற்கரையோர பகுதிகளில் இன்று மற்றும் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilnadu Weatherman post for today and tomorrow, rain conditions

இந்நிலையில், சென்னையில் உள்ள சுரங்க பாதைகளில் மழைநீரை வெளியேற்றும் பணிக்காக மோட்டார் பம்புகள், மழையினால் பாதிப்படையும் மக்களை பாதுகாக்க நிவாரண மையங்கள், சமூக நல கூடங்கள் ஆகியவை தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி அறிவித்திருக்கிறது. இதனிடையே, மழை வெள்ளம் குறித்து மக்கள் புகார் அளிக்க 1913 என்ற எண்ணிற்கு போன் செய்யலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Also Read | லாட்டரியில் ₹ 248 கோடி ஜெயிச்ச நபர்.. குடும்பத்துக்கு தெரிய கூடாதுன்னு எடுத்த முடிவு.. வைரல் சம்பவம்

CHENNAI, WEATHER, RAIN, TAMILNADU WEATHERMAN

மற்ற செய்திகள்