'கொரோனா' காலத்திலும்,,.. இந்த விஷயத்துல 'தமிழ்நாடு' செம 'மாஸ்' காட்டியிருக்காங்க,,.. வெளியான 'புள்ளி' 'விவரங்கள்'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளின் அதிகரிப்பின் காரணமாக, மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் 2.6 ஆக குறைந்துள்ளன. பிப்ரவரி மாதத்திற்கு பின் மிகவும் குறைந்த வேலையின்மை சதவீதமாக இது பதிவாகியுள்ளது.

'கொரோனா' காலத்திலும்,,.. இந்த விஷயத்துல 'தமிழ்நாடு' செம 'மாஸ்' காட்டியிருக்காங்க,,.. வெளியான 'புள்ளி' 'விவரங்கள்'!!!

மாநிலத்தின் மொத்தம் மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் வரை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இதன் மூலம் 29 சதவீதம் வரை கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. 2019 - 20 காலகட்டங்களில் 2.7 லட்சம் ஹெக்டர்கள் வரை இருந்த சாகுபடி 2020 -21 சமயத்தில் 12 லட்சம் ஹெக்டர் வரை அதிகரித்துள்ளது.

அதே போல, தமிழகத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு, ஏப்ரல் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் சுமார் 49 சதவீதம் வரை இருந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை மாதத்தில் 8.1 சதவீதமாக குறைந்தது. தற்போது மேலும் குறைந்து 2.6 சதவீதமாக உள்ளது. இதற்கு காரணம், தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டன. மேலும், மற்ற மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, செப்டம்பர் மாதமும்  உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. உற்பத்தித் துறையில் பெரிய மாநிலங்களை கணக்கிடும் போது, குஜராத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 1.9 சதவீதமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மை குறைவான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

மற்ற செய்திகள்