தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு.. இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு கிடைத்த அசத்தல் வாய்ப்பு.. முழு விவரம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகம் : ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவது குறித்து, ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு.. இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு கிடைத்த அசத்தல் வாய்ப்பு.. முழு விவரம்

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர் தேர்வை நடத்தி, பணியிடங்களை நிரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 9,494 ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பு தற்போது ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தேர்வுகள் அறிவிப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு  வருகிறது. அதே போல, அரசு பணிகளுக்கான தேர்வுகளும், பெரிய அளவில் நடைபெறவில்லை. இதனையடுத்து, ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு

இதன் படி, என்னென்ன தேர்வுகள், எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்பது குறித்த விவரத்தையும் தற்போது வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி, ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது. அதே போல, அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை வெளியீடு

மேலும், நவம்பர் 2 ஆம் வாரத்தில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதனைத் தவிர, இரண்டாம் நிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு, ஜூன் இரண்டாம் வாரத்திலும், அரசு காலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிகளுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்திலும், அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, டிசம்பர் இரண்டாம் வாரத்திலும் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இதில், இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு அசத்தல் வாய்ப்பு ஒன்றும் உள்ளது. அதாவது, பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் மற்றும் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு கணித ஆசிரியராக பணிபுரியலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை, அரசு பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களாக ஆசைப்படும் நபர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதே போல, பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு சில தேர்வு வாய்ப்புகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

TEACHERS EXAM, TEACHER RECRUITMENT BOARD, இன்ஜினியரிங், ஆசிரியர் தேர்வு

மற்ற செய்திகள்