'குழந்தைகளுக்கு லீவு விடுங்க!'... மாணவர்களுக்காக களத்தில் குதித்த ஆசிரியர்கள்!... தமிழக முதல்வருக்கு 'ஆசிரியர் சங்கம்' கோரிக்கை!!... சென்னையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குழந்தைகளுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால், உலகம் முழுவதும் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் இருந்து வருவதால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில், தமிழக முதல்வருக்கு மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், அச்சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் சொல்லியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்றாலும், கேரளா, கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் பாதிப்பு பரவலாகி வருகிறது. தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுத்தேர்வு மற்றும் மாணவர்கள் நலன் கருதி 10 மற்றும் 12-ம் வகுப்பினைத் தவிர்த்து, மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வினை ரத்து செய்து விடுமுறை அளித்திட வேண்டும்.
மேலும் கர்நாடகாவில் கொரோனா வைரசால் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டு வருவது வரவேற்புக்குறியது. அதே வேளையில் குழந்தைகள் தற்காப்பு நடவடிக்கை கடைபிடிப்பதில் சிரமங்கள் உள்ளன.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள, புதுச்சேரி மாநில அரசுகள் தொடக்க, நடுநிலை மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.
எனவே குழந்தைகளின் நலன் கருதியும் தற்போது சளி இருமல் தும்மல் போன்றவை அதிகரித்து வருவதால் குழந்தைகளுக்கு வைரஸ் பராமல் தடுக்கும் நோக்கத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்.கே.ஜி. வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 31-ந்தேதி வரை விடுமுறை வழங்க ஆவண செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.