"24 மணி நேரம், 7 நாள்.. 'இது' ஓகே, ஆனா 'இது' கூடாது".. தமிழக அரசின் புதிய அரசாணை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

"24 மணி நேரம், 7 நாள்.. 'இது' ஓகே, ஆனா 'இது' கூடாது".. தமிழக அரசின் புதிய அரசாணை!

தமிழகத்தில் இயங்கும் பல்வேறு வணிக நிறுவனங்களும், சிறிய மளிகைக்கடைகளுமே சரி, பெரும்பாலும் 11 மணிக்குள் மூடப்பட்டு விடுவன. ஒரு சில வெளிநாட்டு உணவகங்களோ, இன்னும் சில நிறுவனங்களோ இரவு முழுவது இயங்குவது போல், எல்லா வணிக நிறுவனங்களும், சிறுகுறு வியாபார ஸ்தலங்களும் இயங்குவதில்லை. அவற்றிற்கு பல இடங்களில் அனுமதியும் இல்லை.

இந்நிலையில் இதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் தொழில்வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் இத்தகைய ஒரு புதிய அரசாணையை தமிழக அரசு பிறப்பிப்பதாகத் தெரிவித்துள்ளது.

அதேசமயம், 24 மணி நேரம் 365 நாட்களும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டிருப்பது என்பது பலதரப்பட்ட சிக்கல்களை உள்ளடக்கிய மில்லியன் டாலர் கேள்விகளை எழுப்புவதால்,  பெண் பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், ஊழியர்கள் 8 மணி நேரத்துக்கு மேலாக பணிபுரிவது சட்டத்துக்கும், மனித வள பயன்பாட்டுக்கும் எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

24HRS_SHOPOPENING, TNGOVT, SHOPS