கொளுத்தும் வெயில்.. இந்த 3 மணி நேரம் வெளியே வராதீங்க... அரசின் அட்வைஸ்.. வேதர்மேன் சொன்ன குட்நியூஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு நகரங்களில் வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது.

கொளுத்தும் வெயில்.. இந்த 3 மணி நேரம் வெளியே வராதீங்க... அரசின் அட்வைஸ்.. வேதர்மேன் சொன்ன குட்நியூஸ்..!

                                Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஒரு வாரமா பாசமா வளர்த்த யானைக்குட்டி.. பிரிஞ்சு போற நேரத்துல கண்ணீர்விட்ட அதிகாரி.. நெகிழ்ச்சி சம்பவம்..!

இந்தியாவில் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் சட்டென அதிகரித்து வருகிறது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் மிக அதிக அளவில் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. அண்டை மாநிலமான தெலுங்கானாவில் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி வரை பள்ளிகள் பாதி நாள் மட்டுமே செயல்படும் என மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தை பொறுத்தவரையில் அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே பல நகரங்களில் கடும் வெயில் மாட்டி வருகிறது. தமிழகத்தின் ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் வெப்ப அலையை எதிர்கொள்ள சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் குழந்தைகள், வயதானவர் மற்றும் கர்ப்பிணிகள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Tamilnadu may have rain in upcoming weeks says weather man

Images are subject to © copyright to their respective owners.

மழை

ஒருவேளை அவசர நிலை காரணமாக வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடை, உடலை முழுவதுமாக மறைக்கும் பருத்தி ஆடைகள் ஆகியவற்றை உபயோகிக்கும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது. பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளும்படியும் முடிந்தவரை அதிகமாக தண்ணீர் குடிக்கவும் நிபுணர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். அதே நேரத்தில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மேற்கு உள்  மாவட்டங்களில் கிழக்கிலிருந்து காற்று வீசி வருவதாகவும் இது மெல்ல தரைக்காற்றாக மாறி வீசும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Tamilnadu may have rain in upcoming weeks says weather man

Images are subject to © copyright to their respective owners.

இது வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் அதே வேளையில் அடுத்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் மழை பெய்யக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அங்காங்கே மழை பெய்யலாம் என பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார். இந்த சூழலில் இன்று காலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பநிலை ஓரளவு குறைந்து இருப்பதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Also Read | "நான் ஒருமுறை கூட CUP அடிக்கல.. ஆனா நமக்கு Fans".. தொடர் தோல்வியில் RCB மகளிர் அணி.. கோலி கொடுத்த அட்வைஸ்.. வீடியோ..!

WEATHER MAN, RAIN

மற்ற செய்திகள்