கரையை கடந்த மாண்டஸ் புயல்... அடுத்து தமிழகத்தில் என்ன நடக்கும்?.. விவரம் உள்ளே!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாண்டஸ் புயல் காரணமாக, கடும் காற்று வீசிய நிலையில், மாமலப்புரம் பகுதி அருகே கரையை கடந்துள்ளது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல், நேற்று இரவு முதல் மெல்ல மெல்ல கரையைக் கடக்கத் தொடங்கியது.
இரவு 9 மணி முதல் லேசாக காற்று வீச தொடங்கியதன் காரணமாக, பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதே போல மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. கோவளம் கடற்கரை பகுதியில் கூட இந்த காற்றின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தன.
அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம் காட்டுபாக்கத்தில் 142 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 106 மில்லி மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 103 மில்லி மீட்டரும் பதிவாகி உள்ளது. அதே போல, சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் மணிக்கு 79 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்த நிலையில், காலையில் மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் மதியம் காற்றழுத்த தாழு மண்டலமாக வலுவிழந்து வட உள்மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும் தென் மணடல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் தொடர்ந்து சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தெரிகிறது.
மற்ற செய்திகள்