10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளிக்கல்வி துறை போட்ட முக்கிய உத்தரவு
முகப்பு > செய்திகள் > தமிழகம்10 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு குறித்த முக்கிய தகவலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதமே, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, முதல் திருப்புதல் தேர்வினை நடத்த, திட்டமிடப்பட்டு, இதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, அந்த சமயத்தில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
முதல் திருப்புதல் தேர்வு
இதன் காரணமாக, தேர்வும் ஒத்திப் போன நிலையில், தற்போது நோய் தொற்று பரவல் குறைந்துள்ள காரணத்தினால், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, முதல் திருப்புதல் தேர்வு, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல், 15 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, நிச்சயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பொது தேர்வு
பொதுத் தேர்வுக்காக மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில், திருப்புதல் தேர்வை, பொதுத் தேர்வு போன்று நடத்த, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. முதல் முறையாக, திருப்புதல் தேர்வுக்கு அரசுத் தேர்வு துறை வழியே மாநில அளவில், ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படவுள்ளது. இந்த தேர்வை, தேர்வுத் துறையின், அனைத்து வித கட்டுப்பாடுகளுடன் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு முடிந்ததும், விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் மதிப்பீடு செய்யாமல், முதன்மை கல்வி அலுவலரின் அறிவுறுத்தல்படி, விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்