"ராணி மாதிரி இருக்குற மனைவிய.. மகாராணி மாதிரி பாத்துப்பேன்".. மாற்றுத்திறனாளியின் உருக வைக்கும் காதல் கதை

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வீரபத்திர மணி. இவர் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அவரது பெற்றோர் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், தாத்தா - பாட்டி அரவணைப்பிலும் அவர் வாழ்ந்து வந்துள்ளார்.

"ராணி மாதிரி இருக்குற மனைவிய.. மகாராணி மாதிரி பாத்துப்பேன்".. மாற்றுத்திறனாளியின் உருக வைக்கும் காதல் கதை

Also Read | Bigg boss 6 tamil : “திங்கள், செவ்வாய், புதன் அமைதியாக இருப்பார்... வியாழன், வெள்ளி, சனி அடித்துப் பறக்க விடுவார்.” - அசீம் குறித்து அசல்.!

பத்தாம் வகுப்பு வரை படிப்பில் சிறந்து விளங்கிய வீரபத்திரமணி, பாட்டியின் இறப்புக்கு பிறகு பொருளாதார சூழ்நிலை காரணமாக அதன் பின்னர் படிப்பை தொடர முடியாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் பின்னர், அருகேயுள்ள மைக் செட் கடையில் ஆபரேட்டராகவும் வீரபத்திரமணியும் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது கிடைத்த வருவாய் மூலம், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மொபைல் போன் சர்வீஸ் பயிற்சியையும் அவர் முடித்துள்ளார். அதே வேளையில், மைக் செட் கடையில் வீரபத்திரமணி போடும் பாடல்களுக்கு அப்பகுதியில் நிறைய பேர் ரசிகர்களாகவும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது..

tamilnadu handicapped man love story makes everyone emotional

அப்படி சுமதி என்ற பெண்ணுடன் வீரபத்திரமணிக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தனது காதலையும் சுமதியிடம் வீரபத்திரமணி வெளிப்படுத்த, ஒரு மாத கால அவகாசத்திற்கு பின்னர் அவர் சம்மதமும் சொல்லி உள்ளார். இது பற்றி பேசும் சுமதி, "எனது வீட்டில் விஷயம் தெரிந்ததும் எனது தந்தை பிரச்சனை செய்து விட்டார். இது பற்றி இவரிடம் நான் தெரிவித்தேன். அவரது தாத்தா இறந்து மூன்று நாள் கழித்து என்னை அழைத்து சென்றார். அதன் பின்னர், நண்பர்கள் சிலர் உதவியுடன் கோவிலில் வைத்து திருமணம் செய்தோம். இப்போது கடை வைத்து நன்றாக தான் என்னை பார்த்து கொள்கிறார்" என்றார்.

tamilnadu handicapped man love story makes everyone emotional

காரைக்குடியில் அமராவதி புதூர் என்னும் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வீரபத்திரமணி மற்றும் சுமதி ஆகியோர் தங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மொபைல் சர்வீஸ் கடை ஒன்றை வீரபத்திரமணி நடத்தி வரும் நிலையில், அவரது நிலையை கருத்தில் கொண்டு மூன்று சக்கர வண்டி ஒன்றையும் தவணை முறையில் ஒருவர் வாங்கி கொடுத்துள்ளார்.

இதனிடையே, அந்த நபரும் இறந்து போக தவணை பணத்தையும் கட்ட தொடங்கி உள்ளார் வீரபத்திரமணி. 3 ஆண்டுகளாக எந்தவித நிதியுதவியும் இல்லாமல் மனைவியை பார்த்து வரும் வீரபத்திரமணி, அரசு உதவி கிடைத்தால் ராணி மாதிரி இருக்கும் எனது மனைவியை மகாராணி மாதிரி பார்த்துக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read | விராட் கோலி வெச்ச அப்பீல்.. அடுத்த கணமே அவருகிட்ட ஓடி வந்த ஷகிப்.. பரபரப்பு நிமிடங்கள்!!

LOVE, LOVE STORY, HANDICAPPED MAN

மற்ற செய்திகள்