'பசங்களா ரெடியா இருங்க'... 'அரசு பள்ளிகளில் ஆன்லைன் கல்வி'... 'இந்த தேதி முதல் ஆரம்பம்'... அமைச்சர் செங்கோட்டையன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாகத் தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதன் காரணமாகப் பல தனியார்ப் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளில் வரும் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ''பாடப்புத்தகங்களை வழங்கியவுடன் ஆன்லைன் கல்வித் திட்டம் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. தனியார்ப் பள்ளிகளில் நடப்பது போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வரும் 13-ந்தேதி மூலம் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும்.
12-ம் வகுப்பில் இறுதித் தேர்வு எழுதாத 34,482 மாணவர்களின் 718 மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 718 மாணவர்களுக்கு இன்று மாலைக்குள் தேர்வு தேதியை முதல்வர் அறிவிப்பார். இறுதித் தேர்வு முடிந்தவுடன் 4 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும்'' என அமைச்சர் தெரிவித்தார்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS