'என்னாது இவங்க இப்ப கலெக்டர் இல்லயா?'..மாறிய அதிகாரிகள்.. எங்க. எந்த கலெக்டர்.. விபரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் சென்னை, சேலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய மாவட்ட ஆட்சியர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் ஆணையின் பேரில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

'என்னாது இவங்க இப்ப கலெக்டர் இல்லயா?'..மாறிய அதிகாரிகள்.. எங்க. எந்த கலெக்டர்.. விபரம் உள்ளே!

குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த வருடம் ஆட்சியராக பொறுப்பேற்ற ரோகினி, பரபரப்பாகவும், ஆக்டிவாகவும் இருந்ததாலும், தன்னுடைய தீராப் பணிகளாலும் அடையாளங் காணப்பட்டார். மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடங்கி, சம்பவங்கள், விபத்துகள், இயற்கைப் பேரிடர்கள், பெண் பாதுகாப்பு என எல்லாவற்றிலும் ஒரு ஆட்சியராக தனி கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில், அவர் தற்போது தமிழ்நாடு இசைப்பல்கலைக் கழகத்தின் பதிவாளராக பதவிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எப்போதுமே ஆட்சியர்களுக்கு இந்த பணியிட மாற்றங்களும், பதவிமாற்றங்களும் சகஜம்தான் என்றாலும், அவருடைய சமூல நல பணிகளுக்கு  தொடர்பில்லாத பணியாக இந்த நிர்வாகப் பணி இருக்கிறதோ என்கிற பேச்சுகளும் எழுந்துள்ளன.

தமிழ்நாடு இசைப்பல்கலைக் கழக பதிவாளராக, சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகிணி பதவிமாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த நிலையில், இதற்கு முன் இசைப் பல்கலைக் கழக பதிவாளராக, இருந்த சீதாலட்சுமி சென்னை மாவட்ட ஆட்சியராகவும், சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த சண்முக சுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராகவும், வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராகவும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் அரியலூர் மாவட்ட ஆட்சியராகவும், அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகவும், மாநில தேர்தல் ஆணையச் செயலாளராக இருந்த டி.எஸ்.ராஜசேகர் மதுரை மாவட்ட ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

IAS, ROHINI, TNGOVT