Breaking: நாளை முதல் இரவு எத்தனை மணி வரைக்கும் கடைகள் இயங்கலாம்...? - தமிழக அரசின் புதிய அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நெறிமுறைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது கடந்த மாதங்களாக மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி பல தளர்வுகளை அறிவித்திருந்தது.

Breaking: நாளை முதல் இரவு எத்தனை மணி வரைக்கும் கடைகள் இயங்கலாம்...? - தமிழக அரசின் புதிய அறிவிப்பு...!

ஏற்கனவே தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்துக் கடைகளும் இரவு 8 மணி வரை திறக்கலாம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது பண்டிகைக் காலம் என்பதால் இரவு 10 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பொது மக்களுக்கும், கடைகளின் உரிமையாளர்களுக்கும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், 'மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. மேலும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது.

எதிர்வரும் பண்டிகை காலத்தினை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் நாளை முதல் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இயங்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் முகக்கவசம் அணிவதையும், குறைந்தது 6 அடி இடைவெளி கடைப்பிடிப்பதையும் அடிக்கடி சோப்பின் மூலம் கைகளை கழுவுவதையும், பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.'  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

மற்ற செய்திகள்