'திங்கட்கிழமை முதல் பொதுமுடக்கம்'... 'இன்றும் நாளையும் கடைகள் திறக்கப்படுமா'?... தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வரும் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், வரும் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றும் நாளையும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் எனத் தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொதுமக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வதற்காக 08.05.2021 (சனிக்கிழமை) மற்றும் 09.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களிலும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் வழக்கம் போல் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்