செமஸ்டர் தேர்வுகள்... மாணவர்கள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பரபரப்பு உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கையை ஏற்று செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வருகிற ஜனவரி 20-ம் தேதி முதல் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
மேலும் அமைச்சர் பொன்முடி கூறுகையில், "மாணவர்களின் நலன் கருதி செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. விரைவில் அடுத்த அறிவிப்பு வரும். தேர்வு நடத்த ஒரு வாரத்துக்கு முன்னர் அட்டவணை வெளியிடப்படும். உத்தரவை மீறி மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கல்லூரிகள் மூடப்படும். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
மற்ற செய்திகள்