சென்னை: தமிழ்நாடு அரசு துறையில் பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூட்டுறவு தணிக்கைத்துறையில் காலியாக உள்ள 8 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதேபோல் ஆசிரியல் தேர்வு வாரியம் 9 ஆயிரம் பணியிடங்களுக்கு அறிவிப்பு இந்த ஆண்டு வர உள்ளது.
தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி ஸ்டெப்.. 'விக்கெட்' எடுத்ததும்.. மைதானத்திலேயே ஆடிய வெளிநாட்டு வீரர்
முதலில் உதவி இயக்குநர் கூட்டுறவு தணிக்கை (Assistant Director of Co-operative Audit) பணிக்கான அறிவிப்பினை பார்ப்போம்.
உதவி இயக்குநர் கூட்டுறவு தணிக்கை பணிக்கு மொத்த காலியிடங்கள்: 08
மாத ஊதியம் : ரூ. 56,100 - 1,77,500
எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம் : விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 01.07.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
உதவி இயக்குநர் கூட்டுறவு தணிக்கை அதிகாரி பணிக்கு கல்வி தகுதி என்ன : எம்.ஏ(கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவில் டிப்ளோமா அல்லது ஐசிஏஐ முடித்திருக்க வேண்டும்.
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம் உண்டா : உண்டு.. தேர்வு கட்டணம் ரூ. 150, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு எப்போது நடைபெறும்: 30.04.2022 அன்று காலை தாள்-I, மதியம் தாள்-II எழுத்துத் தேர்வு நடைபெறும்.
மேலும் விவரங்கள் எப்படி அறியலாம்
https://www.tnpsc.gov.in/Document/english/2022_02_AD_Cooperative%20Audit_Eng.pdf என்ற பிடிஎப் பைலை கிளிக் செய்து அறியலாம். உதவி இயக்குநர் கூட்டுறவு தணிக்கை பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.02.2022,
ஆசிரியர் பணிகள்
பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயா் கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியா்கள், விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் தோ்வுக்குரிய கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியில் 2 ஆயிரத்து 407 போ் நியமனம் செய்வதற்கான தோ்வுகள் பிப்ரவரி 2-ஆவது அல்லது 3-ஆவது வாரத்தில் நடைபெறும். ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் தகுதித் தோ்வு நடத்தப்படும்.
இடைநிலை ஆசிரியா் 3 ஆயிரத்து 902, பட்டதாரி ஆசிரியா்கள் ஆயிரத்து 87 பணியிடம் என 4 ஆயிரத்து 989 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும். இதற்கு ஜூன் மாதம் 2-ஆவது வாரத்தில் தோ்வு நடத்தப்படும். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு 167 விரிவுரையாளா் தோ்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் 2-ஆவது வாரத்தில் தோ்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் காலியாகவுள்ள பணியிடங்கள்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 334 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதல் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்படும்.
சூப்பராக மாறாகப் சென்னை புறநகர்! அமையப் போகும் வேறலெவல் வசதி.. மாஸ்டர் பிளான் ரெடி
பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 493 உதவி விரிவுரையாளா் பணிக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு, நவம்பா் 2-ஆவது வாரத்தில் தோ்வு நடத்தப்படும்.
உதவிப் பேராசிரியா் பணி: பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடத்தில் 104 பேரை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பா் மாதம் வெளியிடப்பட்டு, டிசம்பா் 2-ஆவது வாரத்தில் தோ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 9 ஆயிரத்து 494 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுகளுக்கு உரிய கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளாா்.
மற்ற செய்திகள்