'கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கணும்'... 'தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமல்'... தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் திங்கள்கிழமை முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட இருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் இரண்டாவது அலை சுனாமி போன்ற தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் இன்று 4.14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவது பெரும் சவாலாக உள்ளது. தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நேற்று 26,000ஐ நெருங்கியது. இந்தநிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாகத் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,23,965 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு நாள்களில் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள், தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நாள்களில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu heads for a completely lockdown from May 10. Here aren the details on what will be open and what will be closed... pic.twitter.com/NqvhiO6Lxt
— Sangeetha Kandavel (@sang1983) May 8, 2021
மற்ற செய்திகள்