ஜனவரி 14ஆம் தேதியில இருந்து ஊரடங்கா? பொங்கல் அப்போ இருக்குற தடை என்ன? எதுக்கெல்லாம் அனுமதி?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை : கொரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இது போக, இன்னும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதையடுத்து, தமிழக அரசு தற்போது சில புதிய ஊரடங்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஞாயிற்றுகிழமையான 16 ஆம் தேதியும் முழு நாள் ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைகளுக்காக வெளியூர் செல்லும் பொது மக்களுக்கு 75 % இருக்கை அனுமதியுடன் பொது பேருந்துகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, ஜனவரி 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை, வழிபாடுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனைத் தவிர்த்து, ஏற்கனவே தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்