‘30 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை’.. சென்னைக்கு வந்த சீனாவின் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீனாவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் தமிழகம் வந்தடைந்துள்ளது.
கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள சீனாவிடம் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை வாங்க இந்தியா முடிவெடுத்தது. இந்த நிலையில் நேற்று சீனாவில் இருந்து இந்தியாவுக்கு 6.5 லட்சம் ரேபிட் ரெஸ்ட் கிட்டுகள் வந்துள்ளதாக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு அவை பிரித்து அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 24000 ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளது. சென்னையில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளது. இந்த ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் நோய் தொற்று உள்ளவர்களை 30 நிமிடத்தில் கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.