தமிழகத்தில்... "இனிமே 'இ பாஸ்' கிடைக்குறது ரொம்ப ஈஸி"... 'இத' மட்டும் பண்ணா போதும்... முதல்வர் வெளியிட்ட முக்கிய 'அறிவிப்பு'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.
திருமணம், மரணம் அல்லது மருத்துவ தேவைகள் போன்ற மிகவும் அத்தியாவசியமான காரணங்களுக்காக மட்டும் இ பாஸ் வழங்கப்பட்டு வந்தது. மேலும், இ பாஸ் மீதான கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்த வேண்டுமென தமிழக மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், இ பாஸ் மீதான சில முக்கிய தளர்வுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், 'ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ பாஸ் பெற்றுக் கொள்வதற்கு ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், எந்தவித தாமதமும் தடையுமின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்க உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற பயணங்களை தவிர்த்து, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இதனை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்