தேர்தல் முடிவுகள்: அதிமுகவை வீழ்த்தி மலர்ந்த தாமரை.. கடைசி நேரத்தில் நடந்த ஏமாற்றம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் சரியாக காலை 8 மணிக்கு இதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
சேலம் மாநகராட்சி தேர்தல் - திருநங்கைக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்.. மாற்றம் தொடங்கிவிட்டது
ஆரம்பம் முதலே பல இடங்களை திமுக கைப்பற்றி வருகிறது. இந்நிலையில்ன் நெல்லை மாவட்டத்தில் அதிமுகவை வீழ்த்தி பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் பாஜக தொண்டர்கள் குஷியாகி உள்ளனர்.
ஒரே எண்ணிக்கை ஒட்டு
நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மனுவேலுவும், அதிமுக வேட்பாளர் உஷாவும் 266 வாக்குகள் பெற்று சமநிலை பெற்றனர். இதனால் யார் வெற்றியாளர் என்ற குழப்பம் நேர்ந்தது. இதனையடுத்து குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் மனுவேலு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை வட்டார பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வெற்றியின் விளிம்பு வரையில் சென்ற அதிமுக வேட்பாளர் உஷா குலுக்கல் முறையில் வெற்றியை பறிகொடுத்தது அப்பகுதி அதிமுக தொண்டர்களை ஏமாற்றம் அடைய செய்தது.
தேர்தல் முடிவுகள்: முதல் களமே அதகளம்.. வெற்றியை ருசித்த விஜய் மக்கள் இயக்கம்..
மற்ற செய்திகள்