மேலே போறது '400 KV' 'கரண்ட்' .. ஆஃப் பண்ணாமல் வேலை பார்த்த மின் ஊழியர்.. ராஜேஷ் லக்கானி விளக்கம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தைப் பொறுத்தவரையில், மழை, புயல் என எந்த காலத்திலும் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டால், அதனை மின் ஊழியர்கள் மிகுந்த ஆபத்தான சூழலில் தான் சரி செய்து வருகின்றனர்.
அது மட்டுமில்லாமல், இயல்பான கால நேரத்திலும், மின்வாரிய ஊழியர்கள் தங்களது உயிரைப் பயணம் வைத்துத் தான் பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக, சில உயிரிழப்புகள் ஏற்பாடாமலும் இருந்ததில்லை.
இந்நிலையில், தமிழக மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, தனது ட்விட்டர் பக்கத்தில், மின்வாரிய ஊழியர் ஒருவர், மின்சாரத்தைத் துண்டிக்காமலேயே, ஏணி ஒன்றை வைத்துக் கொண்டு, பணிபுரியும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். '400KV (4,00,000 Volts) Supply Voltage ஐ OFF செய்யாமல் நமது தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் பணி செய் அற்புதமான காட்சி' எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனைக் கண்ட நெட்டிசன்கள், சற்று குழப்பமடைந்தனர். அப்போது கமெண்ட்டில், 'ஏன் சார் இவ்வளவு ஆபத்தான வேலை?. உண்மையில் எனக்கு இந்த சாகசம் ஏன் என்று புரியவில்லை?' என கேள்வி எழுப்பியிருந்தார்.
400KV (4,00,000 Volts) Supply Voltage ஐ OFF செய்யாமல் நமது தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் பணி செய் அற்புதமான காட்சி pic.twitter.com/ByWjI8DW8V
— Rajesh Lakhani (@RajeshLakhani69) December 22, 2021
இதற்கு பதிலளித்த ராஜேஷ் லக்கானி, 'அந்த ஊழியர் நோமெக்ஸ் அராமிட் மற்றும் மைக்ரோஸ்கோபிக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் உருவான சூட் ஒன்றை அணிந்துள்ளார். இது நெருப்பு மற்றும் மின்சாரத்தில் இருந்து அவரைக் காத்துக் கொள்ள உதவும். இதனால் ஷாக் ஒன்றும் அடிக்காது. இந்த பாதுகாப்பு உபகரணத்தின் மூலம் பல லட்ச ரூபாய் வரை சேமிக்கலாம்' என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மின்வாரியம், அதன் ஊழியர்களுக்கு பாதுகாப்பான உபகரணம் அளித்துள்ளதை பலரும் பாராட்டி வரும் நிலையில், மேலும் சிலர் இது அவர்களுக்கு எந்த அளவிற்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பதையும் தெளிவாக சோதனை செய்ய வேண்டும் என தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்