'கூட்டுறவு' சங்கங்களில் 'நகைக்கடன்' பெற்று... 'திரும்ப' செலுத்த முடியாதவர்களுக்காக... 'தமிழக' முதல்வரின் 'அதிரடி' அறிவிப்பு!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், இன்றைய கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

'கூட்டுறவு' சங்கங்களில் 'நகைக்கடன்' பெற்று... 'திரும்ப' செலுத்த முடியாதவர்களுக்காக... 'தமிழக' முதல்வரின் 'அதிரடி' அறிவிப்பு!!

அதில், முதல்வர் பழனிசாமி கூறியிருப்பதாவது: 'கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் கடுமையான பாதிப்பை சந்தித்தது. தமிழக மக்களும் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதே போல, விவசாயமும் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமில்லாமல், நிவர், புரெவி போன்ற புயல்களும், அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் ஏற்பட்ட கனமழையால் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கடும் இன்னலுக்குள் ஆயினர்.

இப்படிப்பட்ட பிரச்சனைகளால், ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களில் தாங்கள் பெற்றிருந்த நகைக் கடனை திரும்ப செலுத்துவதில் சிரமத்திற்குள் ஆகி வருகின்றனர்.

 

இந்நிலையில், அவர்களின் கடினமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இது தொடர்பாக பெறப்பட்ட கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகு வைத்துப் பெற்ற நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்கின்றது என்பது மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்' என முதல்வர் பழனிசாமி கூறினார்.

இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்