முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று.. தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த CM
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெருவடிகால் கால்வாய் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார்.
இந்நிலையில், தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் 19 உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்." என கூறியுள்ளார் மேலும் "அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்’ என பதிவிட்டுள்ளார்.
இச்சூழலில், ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இச்சூழலில் இந்த கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Also Read | "நித்யானந்தா மாதிரி இருக்கா?.." 18 அடி சிலைக்கு கும்பாபிஷேகம்??... கடும் குழப்பத்தில் பக்தர்கள்
மற்ற செய்திகள்