‘தக்கலையா?’.. ‘தக்காளியா?’.. அய்யோ பாவம் அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க..‘பதறவைத்த’ பயணச் சீட்டு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி அருகே அரசு பேருந்தில் வழங்கப்பட்ட மின்னணு பயணச்சீட்டு ஒன்றில், சென்று சேரும் ஊரின் பெயர் 'தக்கலை' என்பதற்கு பதிலாக 'தக்காளி' என்று அச்சிடப்பட்டிருந்தது சம்பவம் வைரலாகி வருகிறது.

‘தக்கலையா?’.. ‘தக்காளியா?’.. அய்யோ பாவம் அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க..‘பதறவைத்த’ பயணச் சீட்டு!

மதுரை மாவட்டம் அரசு போக்குவரத்து பணிமனை போடி கிளையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  மார்த்தாண்டத்திற்கு தினமும் காலை செல்லும் அரசு பேருந்து ஒன்றில் மில்டன் என்பவர் ஒருநாள் பயணம் செய்துள்ளார்.  மார்த்தாண்டத்தில் இருந்து தக்கலைக்கு பயணம் செய்துள்ள, இவருக்கு வழங்கப்பட்ட மின்னணு பயணச்சீட்டில் தக்கலை என்கிற ஊரின் பெயர் அதற்கு பதிலாக  ‘தக்காளி’ என்று அச்சிடப்பட்டிருந்தது. இதை மில்டன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதை அடுத்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதாவது தக்கலை என்கிற பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் THUCKALAY(துக்களை) என்று படிக்கவேண்டிய துயரம் உண்டாகிறது. எனவே ஆங்கிலத்தில் THAKALAI (தக்கலை) என மொழிபெயர்த்தால் அனைவருக்கும் நல்லது என்கிற அளவில் கடந்த 2010ஆம் ஆண்டு பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் THAKALAI எனும் வார்த்தையில் ஒரு A மிஸ் ஆக THAKALI (தக்காளி) என்று அப்பயணச் சீட்டில் பதிவாகியது. இதுதான் இந்த வைரல் சம்பவத்துக்கு காரணம். உண்மையைச் சொல்லப்போனால் பத்மநாபபுரம் என்னும் ஊருக்கு தெற்கே உள்ள ஊர் என்பதால் இந்த ஊர் ‘தெற்கு எல்லை’ என அழைக்கப்பட்டு பின்னர் தக்கலை என்று திரிந்து கடைசியில் தற்போது‘தக்காளி’ ஆக மாறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

BUS, TICKET, SPELLING