"இதுக்காகவா டா இப்படி பண்ணி தொலைச்சே",,.. "'ஒரு' வார்த்த சொல்லியிருக்கலாமே"... குடும்பத்தையே 'சுக்கு' நூறாக்கிய 'துயரம்'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தொற்று பரவல் காரணமாக, நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நான்கைந்து மாதங்களாக நாடெங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

"இதுக்காகவா டா இப்படி பண்ணி தொலைச்சே",,.. "'ஒரு' வார்த்த சொல்லியிருக்கலாமே"... குடும்பத்தையே 'சுக்கு' நூறாக்கிய 'துயரம்'!!!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியை அடுத்த நேதாஜி நகரை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ஆன்லைன் வழியாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இணைய வழியாக நடத்தப்படும் பாடங்கள் தனக்கு புரியாமல் இருந்ததால் அந்த சிறுவர் அதிகம் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக, அந்த சிறுவன் விஷ மாத்திரைகளை உண்டு வீட்டிலேயே மயங்கிக் கிடந்துள்ளார். ஆபத்தான நிலையில், அவரை தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக, தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள செல்போன் இல்லாத நிலையிலும், வேறு சில காரணங்களுக்காகவும் பல மாணவர்கள் இது போன்ற தவறான முடிவுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்