'மறைந்த மூத்த தமிழறிஞர் தொ.பரமசிவனுக்கு'.. 'எழுத்தாளர்கள், அரசியல், திரைப் பிரபலங்கள் அஞ்சலி'.. என்ன செய்திருக்கிறார் தொ.ப ?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மூத்த தமிழறிஞரும் பெரியாரியச் சிந்தனையாளருமான தொ.பரமசிவன் நேற்று மறைந்தார்.

'மறைந்த மூத்த தமிழறிஞர் தொ.பரமசிவனுக்கு'.. 'எழுத்தாளர்கள், அரசியல், திரைப் பிரபலங்கள் அஞ்சலி'.. என்ன செய்திருக்கிறார் தொ.ப ?

சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியில் டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய இவரது முனைவர் பட்ட ஆய்வேடான அழகர் கோவில் பிரபலமானது. மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் பணி தொடர்ந்த காலத்தில் இவரது “அறியப்படாத தமிழகம்”  முக்கியமான நூலாக வெளிவந்தது.

tamil writers, politicians, leaders pays last respect Tho Paramasivan

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் ஒரு நிர்வாகியாகவும் அவர் நேர்மையின் இலக்கணமாக வாழ்ந்தார் என்று தொ.பவின் சக பேராசிரியர்கள் குறிப்பிடுவதுண்டு. மார்க்சிய ஆய்வுநெறியின் வழியிலான இவரது பார்வைகளும் படைப்புகளும் உள் தேசிய சிறு தெய்வங்கள் மீதான பண்பாட்டு மற்றும் கலாச்சார ஆய்வுகளாக இருந்தன. அசைவுகள், உரைகல், தெய்வம் என்பதோர், சமயங்களின் அரசியல் போன்ற நூல்வரிசை இவருடைய அரசியல் சித்தாந்த சிந்தனைகள் பற்றி அறிய உதவுகின்றன.

ALSO READ: “கிருஸ்துமஸ், புத்தாண்டில் விதிகளை மீறினா எங்களுக்கு போன் பண்ணாதீங்க!” .. ஜெர்மனியில் போலீஸாரின் ‘வியக்க வைக்கும்’ வேண்டுகோள்!

tamil writers, politicians, leaders pays last respect Tho Paramasivan

இன்று பண்பாட்டு மற்றும் தமிழ் அறிவுத் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பல எழுத்தாளர்களும், ஆய்வாளர்களும் தொ.ப என்று மரியாதையுடன் அழைக்கப்பெறும் இவரது வழி வந்தவர்கள் என்பதும், இவர் பெரியாரிய மற்றும் சமூக நீதி மீது தாகம் கொண்டவர் என்பதும், அதன் தாக்கம் இவருடைய நூல்களில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக இவருடைய இந்து தேசியம் நூல், தமிழ் வைணவம், தமிழ்ச் சமணம் எவ்விதம் வட இந்திய மரபுகளிலிருந்து வேறுபட்டவை என்பவற்றை பற்றிய தம் பார்வையை இவரது நூல்களில் ஆய்வாக விரித்துள்ளார். தமிழின் தொன்மத்தை நோக்கிய ஆய்வுகளிலேயே இவரது வாழ்வின் பெரும் நேரத்தை செலுத்தினார்.

tamil writers, politicians, leaders pays last respect Tho Paramasivan

இவருடைய முற்போக்கான பார்வைகளையும், சிந்தனைகளையும் தாண்டி, கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட, எளிமையாக வாழ்ந்த நல்ல மனிதர் என்கிற ஒருமித்த கருத்தினால் கமல், சீமான், வைரமுத்து மற்றும் பல தமிழ் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் என பலரும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்