இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்றைய முக்கியச் செய்திகள் ஓரிரு வரிகளில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

1. புவிமண்டல மேலடுக்குச் சுழற்சியால், தமிழக கடலோர மாட்டங்களிலும் தென் தமிழகத்திலும் நாளை முதல் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

2. வங்கி அதிகாரிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

3. கால்பந்து வீரர்களை கவுரவிக்கும் வகையில் கொடுக்கப்படும் ஃபிபா சிறந்த வீரர் விருது 6 வது முறையாக கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

4. நெல்லை, கல்லிடைக்குறிச்சியில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை 37ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய நாட்டின் அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த சிலை தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு மீண்டும் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.

5. காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.

6. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் தனது ஆதரவுக் கரத்தை நீட்டியுள்ளார்.

7. ஆதார் அடையாள அட்டையையும் வங்கிக் கணக்கையும் இணைத்து ஒரே அட்டையாகக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.

8. சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது பள்ளிச் சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

9. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரி சீட் பெற்ற விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

10. பெட்ரோலியம் அல்லாத மாற்று எரிசக்தி பயன்பாடு, அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 2 மடங்காக உயர்த்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

NEWS, HEADLINES, TODAY