இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. சென்னை பள்ளிக்கரணையில் பேனரால் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தை அடுத்து, பேனரை அச்சடித்த அச்சக நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

2. கிரிக்கெட் வீரர் தோனி, தன் ஓய்வை அறிவிக்க உள்ளதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்தி என அவரது மனைவி சாக்ஷி ட்வீட் செய்துள்ளார்.

3. ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள பஞ்சலோக நடராஜர் சிலை ரயிலின் மூலம் சென்னை வந்தடைந்தது. ஐஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவின் மூலம் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. மேலும், தனக்கு அனுமதி அளித்தால், எஞ்சியுள்ள எல்லா சிலைகளும் மீட்கப்படும் என்றும் பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

4. வங்கிகள் இணைப்பை கண்டித்து AIBOC, AIBOA, INBOC, NOBO ஆகிய வங்கி அலுவலர் சங்கங்கள் வரும் செப்டம்பர் 25ம் தேதி நள்ளிரவு முதல் 27ம் தேதி வரை வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக நோட்டீஸ் அளித்துள்ளன.                             

5. இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சியானது எதிர்பார்ப்பை விட மெதுவாக உள்ளதாகவும், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நீடிக்கும் பலவீனமும் மந்த நிலைக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் ஐஎம்எப் கருத்து தெரிவித்துள்ளது.

6. எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்டம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

7. ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைப்போர் கைது செய்யப்படுவர் என்று அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். அனுமதி பெறாத பேனர்களை அகற்றவும், விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

8. சென்னையில் பேனர் விழுந்ததால் உயிரிழந்த சுபஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.

9. தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய இருவரை தேடும் பணி 3ம் நாளாக நடைபெற்று வருகிறது. நீரில் மூழ்கிய சுயம்பிரகாசம், பழனிசாமியை கொள்ளிடம் ஆற்றில் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

10. சிவகங்கை மாவட்டம் பாசாங்கரை கிராமத்தில் ஜீவசமாதி ஆகவுள்ளதாக அறிவித்த இருளப்ப சாமி, நேரம் தவறியதால் தற்போது ஜீவ சமாதி அடைய முடியவில்லை என்றும், 2045-ல் அதே இடத்தில் ஜீவசமாதி ஆகவுள்ளதாகவும், அது வரை தொடர்ந்து தவம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

HEADLINESTODAY, NEWS