இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

2. உடல் சோர்வு காரணமாக திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3. இந்தியப் பசுக்களின் பாலில் தங்கம் கலந்திருக்கிறது என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.

4. அயோத்தி வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் சரி, அனைவரும் அமைதி காத்து, கட்டுக்கோப்புடன் சமூகங்களுக்கிடையேயான சகோதரத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினர்.

6. வரும் 14ம் தேதி குழந்தைகள் தினத்தன்று இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை பெற்றோர் தங்களது செல்போன்களை அணைத்து வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

7. டெல்லியில் காவல் துறையினர் நடத்திய போராட்டம், உயர் அதிகாரிகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

8. வங்கக் கடலில் இன்று புல்புயல் உருவாக இருப்பதால், மீனவர்கள் அந்தமான் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9. கால்நடைகளுக்கான சிறப்பு ஆம்புலனஸ் சேவையை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

10. காற்று மாசு பாதிக்கும் என்பதால் வாரணாசியில் உள்ள கோயிலில் சாமி சிலைகளுக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

HEADLINES, CHENNAIWEATHER, TAMILNADU