இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் மற்றும் அவரது சகோதரி பாஜகாவில் இணைந்தனர்.

இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

2. தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் 1மணி நேரம் சிறப்பு வகுப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

4. நடிகர் ரஜினிக்கு எதிராக 2014-ல் தொடரப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றது.

5. அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்படாது. அது அண்ணா பெயரிலேயே இயங்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

6. அவதூறான வகையில் பேசி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

7. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

8. சீனாவில் உள்ள வுகான் நகரில் சிக்கியுள்ள 500 இந்தியர்களை விமானம் மூலம் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

9. நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.

HEADLINES, KUNALKAMRA, CORONOAVIRUS