இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. டெல்லியில் மீண்டும் ஆட்சியமைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

2. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவியுடன் வரும் 24ம் தேதி இந்தியா வரவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

3. பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒழிக்க பாஜக முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

4. பொருளாதாரம் கவலைக்கிடமான வகையில் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாக ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

5. இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியதற்கு டெல்லி மக்களுக்கு நன்றி என ஐபேக் நிறுவனத்தின் நிறுவனர் பிரஷாந்த் கிஷோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

6. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் குறைந்து ரூ. 74.73-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ. 68.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

7. ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட்டணி குறித்து பேசுவோமா என யோசிக்கிறேன், ரஜினி கட்சி தொடங்கட்டும், அதன் பின் பார்க்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

8. சீனாவில் கொரோனோ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

9. மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது.

10. இந்திய மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு குடும்பத்திற்கு இரு குழந்தைகள் என்ற முறையை அமல்படுத்த வேண்டும் என சிவசேனா எம்.பி அனில் தேசாய் மாநிலங்களவையில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

TOPNEWS, DELHIELECTIONRESULTS, INDVSNZ