இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் அ.தி.மு.க. கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏக்கள் மீது மூன்று ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

2. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஒருநபர் விசாரணை ஆணையம் முன்பு வரும் 25-ம் தேதி ஆஜராக நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

3. ஜூனியர் உலகக் கோப்பையில் 172 ரன்களில் சுருட்டிய இந்திய அணி, 176 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

4. சென்னை அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேருக்கும், தூக்கு தண்டனை கேட்டு மேல் முறையீடு செய்ய இருப்பதாக காவல் துணை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

5. 19 வயதுக்குட்பட்டோா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா - பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது.

6. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து, காயமடைந்த இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

7. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வரும் இடைத்தரகர் ஜெயக்குமாரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.

8. இ- விசா சேவையை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் அடுத்த நடவடிக்கையாக, சீனா செல்வதற்காக இணையத்தில் விசா விண்ணப்பிக்கும் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

9. 5 மற்றும் 8-ம் வகுப்புக்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10. தஞ்சை பெரியக் கோவிலில் நாளை குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

11. நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு : விராட் கோலி, மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சுப்மான் கில், புஜாரா, ரஹானே, விஹாரி, சஹா, பண்ட், அஸ்வின், ஜடேஜா, பும்ரா, உமேஷ், சமி, சைனி, இஷாந்த் ஆகியோருக்கு வாய்ப்பு.

OPANNEERSELVAM, EDAPPADIKPALANISWAMI, VIRATKOHLI, CRICKET, POLITICS, ROHIT SHARMA, IND VS NZ, KERALA, CHINA, CORONA VIRUS