இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்காக வீல்சேர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

2. மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு.

3. நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பது பற்றி  டிசம்பர் 12ம் தேதிக்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4. கல்விக் கடன்களை ரத்து செய்வதற்கான திட்டம் ஏதும் இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

5. கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவில் அகதிகளாக வாழும் 1 லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்க பரிசீலிக்க வேண்டும் என ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

6. குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

7. முதல்வராக நினைப்பவர்கள் நித்யானந்தாபோல் தனித்தீவு வாங்கி, முதலமைச்சர் ஆகலாம் என மு.க.ஸ்டாலினை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

8. ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவோ, ஆதரவாகவோ வாக்கு சேகரிக்கக் கூடாது என திருச்சி ரஜினி மக்கள் மன்றம் அறிக்கைவிட்டுள்ளது.

HEADLINES, TAMILNADU, NITHYANANDA, KARTHIGAIDEEPAM