1. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
2. சிலி நாட்டில் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஏற்பட்ட தீ விபத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து கருகின.
3. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.77.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.09 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
4. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. குடியுரிமை திருத்த சட்டத்தில் அண்டை நாடுகளை சேர்த்தபோது இலங்கை, பூட்டானை சேர்க்காதது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
6. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினாலும், காவல்துறையாவது தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
7. கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கிய நீதிபதிக்கு அச்சிறுமியின் தாயார் நன்றி தெரிவித்துள்ளார்.
8. தமிழகத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கான ‘தமிழ் ஆட்சி மொழி சட்டம்’ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் இன்று. கடந்த 1956-ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
9. முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
10. ஊக்க மருத்து பயன்படுத்தியதாக இந்திய குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வானுக்கு 1 ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
11. இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக விளங்கிய மிக் 27 போர் விமானங்கள் இன்றுடன் ஓய்வு பெற்றன.
12. சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் 107 வயது பாட்டி தள்ளாத வயதிலும் வாக்கு செலுத்த ஆர்வத்துடன் வந்தார்.
13. சூரிய கிரகணத்தின் போது அமெரிக்காவை சேர்ந்த ஜோஷ்வா கிரிப்ஸ் புகைப்பட கலைஞர், பாலைவனத்தில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.