1. உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடப்பதால் ஜனவரி 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்கம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
2. பத்திரிகையாளர் கஷோகி கொலை வழக்கில் 5 பேருக்கு சவுதி அரேபியா நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
3. குடியுரிமை திருத்த சட்டத்தினால் சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அரசு பாதுகாக்கும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
4. சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடக்கவுள்ளதாக பரவிய தகவலை அடுத்து அங்கு மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
5. உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர் பொதுமக்கள் பொங்கல் பரிசை வாங்கிக் கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
6. சென்னையில் பேனர்களை ரெயின் கோட்டுகளாக மாற்றி எளியோர்க்கு வழங்கும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
7. மோடி என்ற வீரன் கையில் நாடு உள்ளதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
8. ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
9. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியை வென்று 2-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது.