'தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்குமா'?... 'எதிர்பார்ப்பில் மாணவர்கள்'... பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா நோய்த்தொற்று 2-வது அலை வேகமாகப் பரவியதன் காரணமாகப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

'தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்குமா'?... 'எதிர்பார்ப்பில் மாணவர்கள்'... பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய தகவல்!

கொரோனா இரண்டாவது அலை காரணமாகப் பள்ளிகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.

Tamil Nadu yet to decide on pending Class 12 board exams

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிளஸ் -2 பொதுத்தேர்வு நடத்தப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில் இன்று நடந்த ஆலோசனைக்குப் பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''அனைத்து தரப்பினரிடமும்  நாளை ஆலோசனை நடத்திய பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து  முடிவு தெரிவிக்கப்படும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இறுதி முடிவு எடுப்பார். மேலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து சட்டமன்ற கட்சித் தலைவர்களிடம் நாளை ஆலோசனை நடத்த முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  மருத்துவர்கள், மனநல நிபுணர்களுடனும் ஆலோசனை நடைபெற உள்ளது.

Tamil Nadu yet to decide on pending Class 12 board exams

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களிடம் கருத்துக் கேட்கப்பட உள்ளது'' என அமைச்சர் கூறியுள்ளார். இதனால் அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மற்ற செய்திகள்