'கொரோனா நேரத்திலும் சாதித்த தமிழ்நாடு'... 'தேசிய அளவில் மூன்றாவது இடம்'... முதல்வர் பெருமிதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏற்றுமதிக்கான அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரசாங்க கொள்கை, வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற காலநிலை, ஏற்றுமதிக்கான சூழல் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு Niti Aayog சார்பில் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியலில் அனைத்து அம்சங்களிலும் அசத்தியுள்ள தமிழகம், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர், ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் மாநிலத்தின் பங்கு 45% என்றும், மின்னணு ஏற்றுமதியில் 19% பங்கு என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதியில் மாநிலங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை அளவிடும் நோக்கிலும் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இதனிடையே ஆடைகள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 19 சதவீதமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், தமிழகம் தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஒடிசா, கர்நாடகா கேரளா உள்ளிட்ட கடலோர மாநிலங்கள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில்தான் 70 சதவீதம் ஏற்றுமதி நடைபெறுகிறது. வணிக சுற்றுச்சூழல் அளவீடுகளை பொருத்தமட்டில் தமிழகம் 3வது இடத்தை பிடித்துள்ளது.
மற்ற செய்திகள்