ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்!.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே 31ம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் விளைவாக, தொற்று பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, பாதிப்பு குறைவாக உள்ள தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் மட்டும், 14.6.2021 முதல் தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் 14.6.2021 முதல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்