கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த... மருத்துவமனைகளில் புதிய சீர்திருத்தம்!.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்புடன் வருபவர்களுக்கு தனி பாதையை ஏற்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த... மருத்துவமனைகளில் புதிய சீர்திருத்தம்!.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு என்ன?

தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனாத் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்கு மக்களுக்கான தளர்வுகள் அந்தந்த மாவட்டங்களின் சூழ்நிலைகளுக்கேற்ப தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் காத்திருப்பு அறை, இருக்கைகள், கழிவறைகள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகர்புறங்களில் ஏற்படும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த, நோய்த்தொற்று அல்லாதவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தனிப்பாதையை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று மட்டும் 765 நபர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதில் சென்னையில் 587 நபர்கள் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

 

மற்ற செய்திகள்