‘காலாவதியான டிரைவிங் லைசென்ஸ்’... ‘தமிழகத்தில் புதிய விதி அமல்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை குறைத்துள்ளது தமிழக அரசு.

‘காலாவதியான டிரைவிங் லைசென்ஸ்’... ‘தமிழகத்தில் புதிய விதி அமல்’!

ஒருவரது டிரைவிங் லைசென்ஸ் எனப்படும் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டால், அதனை புதுப்பிக்க 5 ஆண்டுகள் கால அவகாசம் தமிழகத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில் காலாவதியான ஓட்நர் உரிமத்தை புதுப்பிக்க, அதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல், மத்திய அரசு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டால், அதனை புதுப்பிப்பதற்கான கால அவகாசம், தற்போது ஒரு ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளும் புதுப்பிக்க தவறினால், மீண்டும் முதலில் இருந்து புதிதாக ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். இந்த புதிய நடைமுறை தமிழகம் முழுவதும்  அமலுக்கு வந்துள்ளது. எனவே உரிய நேரத்தில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

DRIVING LICENSE, TAMILNADU